ஞாபகம் வருதே
முயலும் ஆமையும் கதை
ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன.அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம்.அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது.மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக ஒருநாள் முயல் தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது.முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து ஆம் என்றது.பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது.ஒரு முடிவிடமும் அறிவிக்கப்பட்டது.முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது.ஆமையோ மிகவும் மெதுவாகவே சென்றது.முக்கால்வாசி தூரம் ஓடி முடித்த முயல் ஆமை மெதுவாக வருவதைக்கண்டு ஒருமரத்தின் கீழ் நித்திரை செய்தது.ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது.அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல். ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது.எனினும் முயலுக்கு முதல் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.
பாட்டி வடை சுட்ட கதை
ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடுஎன்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது.
சிறுவர் பாடல்கள்
அணிலே அணிலே
அணிலே அணிலே ஓடி வா!
அழகு அணிலே ஓடி வா!
கொய்யா மரம் ஏறி வா!
குண்டு பழம் கொண்டு வா!
பாதி பழம் உன்னிடம்,
பாதி பழம் என்னிடம்….
கூடி கூடி இருவரும்
கொறித்து கொறித்து திண்ணலாம்
வெள்ளைப்பசு
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு – மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி
ஆத்திசூடி
அறஞ்செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ஊக்கமது கைவிடேல்.
எண்ணெழுத் திகழேல்.
ஏற்ப திகழ்ச்சி.
ஐய மிட்டுண்.
ஒப்புர வொழுகு.
ஓதுவ தொழியேல்
ஒளவியம் பேசேல்.
கொன்றை வேந்தன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
ஏவா மக்கள் மூவா மருந்து
ஐயம் புகினும் செய்வன செய்
ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
தமிழ்த் தாய் வாழ்த்து
நீராரும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
தமிழணங்கே!
நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
செந்தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)
பழமொழிகள்
அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
தொல்லைபேசி
இன்று
காலை எழுந்தவுடன் நண்பர்களுடன் குறுந்தவகல் பரிமாற்றம்
பெற்றோருக்கு ஒரு அழைப்பு சகோதருக்கு ஒரு அழைப்பு
மனைவி/காதலியுடன் ஓயாமல் தவகல் பரிமாற்றம்
இவை தான் இன்றைய தலைமுறையின் பாசபரிமாற்றம்
அன்று
பாசம் மனதில் அன்பு கண்ணில்
மாதம் அதிகபட்சம் ஒரு கடித பரிமாற்றம்
அன்று
கண்ணீரில் பிரிவின் வெளிப்பாடு
இன்று
தண்ணீரில் பிரிவின் வெளிப்பாடு
உன் நேரம் செலவிட தொலைபேசியால் பிறர் நேரம் வீண்ணடிக்காதே
பல காதலுக்கு கைப்பேசி தான் காரணம்
பல விவாகரத்திற்கும் கைப்பேசி தான் காரணம்
வெளி விளையாட்டு உடலை சீராக்கும்
கைப்பேசி விளையாட்டு நோயை உண்டாக்கும்
கவனத்துடன் பயணம் பிறரை காக்கும்
கைப்பேசியுடன் ஆபத்தை உண்டாக்கும்
அத்தியாவசிய தேவைக்கு தான் தொலைபேசி
தொலைபேசியை தொல்லைபெசியக்காதீர்
-இப்படிக்கு தொலைபேசியால் போனவன்
என் அப்பா
தாய் என்னருகில் இருந்தும்
தாயின் அருமை நான் அறிந்ததில்லை
உறவின் மகிமை எனக்கு புரிந்ததில்லை
நட்பின் மகத்துவம் எனக்கு தெரிந்ததில்லை
உன் பட்டினியால் நான் பசி அறியவில்லை
உன் உழைப்பால் நான் சந்தோஷம் தவிர ஏதும் உணரவில்லை
உன் அணைபால் நான் வலி அறிந்ததில்லை
பதினேட்டு வயதுவரை நான் அழுததில்லை
உலகமறியாத பிள்ளை என வருந்திய என் அப்பா
என் உலகம் நீதானப்பா
நான் நன்றாக படிக்க வேண்டுமென ஆசைப்பட்டார்
எனக்கு ஏனோ படிப்பு வரவில்லை
உன்னால் நான் நல் ஒழுக்கம் மீறவில்லை
நான் முன்னேறி உன்னை பெருமைபடுத்த முயல்கிறேன் முடியவில்லை
நல்லபிள்ளையையாய் இருப்பதை தவிர உனக்கு நான் எதுவும் செய்யவில்லை
ஆயிரம் உறவுகள் எனஅருகில் இருந்தாலும்
இன்று எனக்கு மகிழ்ச்சியில்லை
உன் நினைவுடன் வாழ்கிறேன் நடைபிணமாய்
எதிர்பார்ப்புகள்
பெற்றோருக்கு நல்ல மகனாய்
உடன்பிறப்பிற்கு நல்ல சகோதரனாய்
ஊருக்கு நல்லபிள்ளையாய்
பலர் நடிக்கிறார்கள்
உலகன் ஒரு நாடகமேடை அதில்
எல்லோரும் நடிகர்கள் என்றாராம் ஒரு மேதை
நான் நானாக இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை
பிறர்போல் நடிப்பதை நான் விரும்பவில்லை
படிக்காத பிள்ளையை பெற்றோருக்கு பிடிப்பதில்லை
மதிக்காத மாணவனை ஆசிரியருக்கு பிடிப்பதில்லை
அதற்கு காரணம் அவர்கள் என்பது அவர்களுக்கு புரிவதில்லை
பகட்டாக இருக்காமல் வாழ்வது உறவுகளுக்கு பிடிக்கவில்லை
காரணம் எதிர்பார்ப்புகள்
நான் பரதேசிபோல் திரிந்தாலும் ஆதரிக்கும் ஒரே உறவு நட்பு
காரணம் நட்பு எதிர்பார்ப்புகளற்ற உறவு
நட்பு பலவிதம்
நண்பர்கள் பலவிதம்
காதலை நண்பனிடம் மறைக்கும் நண்பர்கள் சிலர்
காதலால் நட்பினை வெறுக்கும் நண்பர்கள் சிலர்
காதலை சேர்க்கும் நண்பர்கள் சிலர்
காதலை பிரிக்கும் நண்பர்கள் சிலர்
எனக்காக தியாகங்கள் செய்த நண்பர்கள் சிலர்
என்னை தியாகியக்கிய நண்பர்கள் சிலர்
வேலைகிடைத்தும் உதவாத நண்பர்கள் சிலர்
வேலை வாங்கிகொடுத்த நண்பர்கள் சிலர்
தன் பட்டினியிலும் எனக்கு உணவளித்த நண்பர்கள் சிலர்
என்னை பட்டினியாக்கி உணவுண்ட நண்பர்கள் சிலர்
ஆம் நண்பர்கள் பலவிதம்
நான் என்றும் சொல்வேன்
ஒவ்வோரு நண்பனும் தேவை மச்சான்
கல்வி
புத்தகத்தில் விழித்தேன் புத்தகத்தில் படுத்தேன்
சிறுவயதில் பள்ளி சிறையில்
இளம்வயதில் கல்லூரி சிறையில்
இன்று வேலைகாரனாய் அடிமை சிறையில்
காரணம் நான் கற்ற கல்வி
பிறருக்கு வேலையளிக்கும் ஆளுமை கல்விக்கு பதில்
பிறருக்கு அடிமையாய் வாழ கற்றுகொடுக்கும்
நான் கற்ற அடிமை கல்வி
மூளையை கசக்கி அறிவை வளர்பதற்கு பதில்
மூளையை மழுக்கி மதிபெண்பெறச்செய்யும் அடிமை கல்வி
என்று வரும் கல்வித்துறையில் மாற்றம்
-அடிமை கல்வியால் வாழ்விழந்தவன்
வெற்றி எனும் எட்டாக்கனி
வாழ்க்கை என்னும் போர்க்களம்
வெற்றியடைய படையெடுத்தேன்
வெற்றி என்னைவிட்டு விலகிச்சென்றது
விடாமல் துரத்தினேன் முடியவில்லை
செல்லும் வழியறியாது தவித்தேன்
கசினி முகமது கூட 17 முறைதான் படையெடுதான்
நான் வெற்றிபெற தினம் தினம் போராடினேன்
வெற்றிக்கனி புளிக்க ஆரம்பித்துவிட்டது
நரிக்கு திராட்சை புளித்ததுபோல்
என் நிழல்கூட என்னை எப்படி தொடர்ந்ததில்லை
தோல்வி என்னை தொடர்வதுபோல்
என்னை விட்டுவிலகிசெல்லும் வெற்றியைவிட
என்னை விடாமல் தொடரும் நண்பனே (தோல்வியே ) மேல்
-நாண்பேன்டா
பட்டமளிப்பு
லெட்சம் லேட்சமாய் பணம்
வானுயரும் என் புகழ்
கனவுகளுடன் தொடக்கியது என் கல்லூரி வாழ்க்கை
முதலாம் வருடம் பணமிழந்தேன்
இரண்டம் வருடம் என் குணமிழந்தேன்
மூன்றாம் வருடம் என் தன்மானம் இழந்தேன்
நான்காம் வருடம் என் தன்னம்பிக்கை இழந்தேன்
அதனால் கல்வி (பட்டம் ) பெற்றேன்
பணமும் கிடைக்கவில்லை
புகழும் கிடைக்கவில்லை
வேலையும் கிடைக்கவில்லை
அன்று எனக்கு தெரியவில்லை
நடந்தது பட்டமளிப்பு இல்லை என் வாழ்க்கை அழிப்பு என்று
என்னை பொறியில் சிக்கவைத்த பொறியியல்துறை
-கண்ணீருடன் வேலையில்லா பட்டாதாரி
மறந்ததும் அறிந்ததும்
கொடுப்பதை மறந்தேன் கெடுப்பது அறிந்தேன்
பண்பை மறந்தேன் பணத்தை அறிந்தேன்
மதிக்க மறந்தேன் மிதிக்க அறிந்தேன்
நட்பை மறந்தேன் தொழிலை அறிந்தேன்
மனிதம் மறந்தேன் இயந்திரமானேன்
பாடநூல் மறந்தேன் முகநூல் அறிந்தேன்
உணவு உடையவையும் பெற்றேன் உடல்நலமிழந்தேன்
வாழ்க்கை தொலைத்தேன் அடிமையானேன்
என்னை இயந்திரமாக்கிய இயந்திரவியல்துறை
-எது தகவல் அல்ல
ஒரு பொறியாளனின் புலம்பல்
அரசின் அங்கம்
இலவசங்களை புகுத்தி
மக்களின் உழைப்பை நிறுத்தி
மதுக்கடைகளை பெருக்கி
மக்களை போதைக்கு அடிமையாக்கி
கல்வியென்ற பெயரில் கல்லூரிகள் உருவாக்கி
பணம் பிடுங்கி
வரிகளென்ற பெயரில் மக்களின் சேமிப்பை பிடுங்கி
வீணடிக்கும் அரசியல்வாதிகள்
அரசாங்கத்தில் மக்களும் ஒரு அங்கமேன்பதை
நினைத்து பார்பதில்லை
நகரமயமாதல்
வயல்வெளியில் வீடுகள்
சுடுகாடுகளில் ஆலைகள்
வாய்கால்களில் ரோடுகள்
குளங்களில் பேருந்து நிலையங்கள்
ஆறுகள் இன்றைய கூவங்கள்
கிராமங்கள் நகரமாகிறது
முன்னேறுகிறதாம் இந்தியா
விவசாயநிலங்கள் குறைந்தன
உணவுகள் விஷமாயின
ஆலைகளால் நோயாளிகள்
மருந்தே உணவாயின
பள்ளிகள் அதிகரித்தன
ஒழுக்கங்கள் குறைந்தன
வீடுகள் கணினிமயமாயின
நட்புகள் குறைந்தன
வலைத்தளங்கள் பெருகின
விளையாட்டுக்கள் குறைந்தன
வாழ்நாட்கள் சுருங்கின
கிராமத்தை மாசுபடுத்தி நகரமென்ற பெயரில் நரகமாக்காதீர்
முன்னேற்றங்கள் கிராமங்கள் அழிந்து நகரம் பிறப்பதிலல்ல
கிராமங்கள் வளர்வதில்தான்
Bullock Cart |
Making Roofs using coconut leaves |
Colachel Beach |
Ancient house with coconut roof |
Ancient hose with palm roof |
No comments:
Post a Comment